×

அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் எழுத்தறிவு தினம்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடினர். உலக எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். இலக்கிய மன்றச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ் மொழியை மாணவர்கள் பிழையின்றி வாசித்தும் அழகாக எழுதியும் காட்டினர். நிறைவாக ஆசிரியை நித்யா நன்றி கூறினார்.

 

The post அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் எழுத்தறிவு தினம் appeared first on Dinakaran.

Tags : Literacy Day ,Govt School ,Aranthangi ,Arantangi ,World Literacy Day ,Avudayarkoil Government ,Higher Secondary ,School ,Government School ,Dinakaran ,
× RELATED தெருக்கூத்து, வில்லுப்பாட்டில்...