×

அறந்தாங்கி மற்றும் ஆலங்குடியில் 800 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

புதுக்கோட்டை: மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி பேரூராட்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.மெய்யநாதன் நேற்று வழங்கினார். அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில், சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 43 மாணவர்களுக்கும், 52 மாணவிகளுக்கும், சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 49 மாணவர்களுக்கும், 56 மாணவிகளுக்கும், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 16 மாணவர்களுக்கும், 20 மாணவிகளுக்கும் மற்றும் ஆலங்குடி பேரூராட்சியில், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைசேர்ந்த 264 மாணவர்களுக்கும், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவிகளுக்கும் என 800 மாணவர்கலுக்கு ரூ.38,60,080 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்ச்சிகளில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்ஜஸ்டின் ஜெபராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர்.மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி). ராஜேஸ்வரி, தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கி மற்றும் ஆலங்குடியில் 800 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Alangudi ,Pudukottai ,Minister ,Pudukottai District ,Arantangi Panchayat Union ,Alangudi Municipality ,Arantangi ,
× RELATED வியாபாரி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அறிவுறுத்தல்