×

கரூர் வாங்கல் சாலையில் வடிகாலுக்கு தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு

 

கரூர்: கரூர் வாங்கல் சாலையில் வடிகால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் வாங்கல் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. மாவட்டச் சாலைகளில் முக்கியமான சாலையாக வாங்கல் சாலை உள்ளது. இந்த சாலையில் நாமக்கல், சேலம் போன்ற பிற மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்நிலையில், வாங்கல் சாலையில் வடிகால் கட்டும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்காத காரணத்தினால் பிற வாகனங்கள் எளிதாக இந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது.குறிப்பிட்ட தூரம் வரை இந்த பணிகள் காரணமாக வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் வாங்கல் சாலையில் வடிகாலுக்கு தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு appeared first on Dinakaran.

Tags : Karur-Wangal road ,Karur ,Karur Wangal road ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன்...