
புதுடெல்லி: சட்டத்தை தந்திரமாக பயன்படுத்தி அவமதித்தவர்களுக்கு இரக்கம் காட்டத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சொத்து தகராறு வழக்கில் 2015-ம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியை வேண்டுமென்றே மீறி பல்வேறு தரப்பினருக்கு ஆதரவாக 13 விற்பனை பத்திரங்களை பதிவு செய்ததாக ஐந்து பேருக்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் குஜராத் உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதில் 3 பேருக்கு 2 மாதம் சிறை தண்டனையும், மீதமுள்ள 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல. மன்னிப்பு கேட்பது பொறுப்பில் இருந்து தப்புவதற்கான சட்ட தந்திரமே தவிர வேறில்லை என்று தோன்றும் போது நீதிமன்றம் அந்த போலி மன்னிப்பை ஏற்கக் கூடாது. உண்மையான மன்னிப்பு என்பது சுய ஆய்வு, பரிகாரம், சுய சீர்திருத்தம் ஆகியவற்றின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அது இல்லாத நிலையில், மன்னிப்பு கேட்பது கேலிக்கூத்தானது. நீதிமன்றம் காட்டும் மென்மையான அணுகுமுறையை பயன்படுத்தி நீதிமன்றத்தை மதிக்காமல், உத்தரவை மீறவும் பொறுப்பிலிருந்து தப்பிக்கவும் நீதிமன்றங்களை சக்திவாய்ந்த ஆயுதமாகவும் சட்டத்தை தந்திரமாகவும் பயன்படுத்தி அவமதிப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் இரக்கம் காட்டத் தேவையில்லை,” என்று கூறினர்.
The post பொறுப்பிலிருந்து தப்பிக்க சட்டத்தை தந்திரமாக பயன்படுத்துவோருக்கு இரக்கம் காட்டத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.