
- புது தில்லி
- இந்திய தேசிய நீதித்துறை அகாடமி
- சிங்கப்பூர் நீதித்துறை கல்லூரி
- உச்ச நீதிமன்றம்
- நீதித்துறை
- தின மலர்
புதுடெல்லி: இந்திய தேசிய நீதித்துறை அகாடமி சிங்கப்பூர் நீதித்துறை கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் சிங்கப்பூரில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இரு நாடுகளின் நீதித்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நீதித்துறை அகாடமியின் தலைவரான தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும், நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பான மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் சிங்கப்பூரும் நேற்று கையெழுத்திட்டன.
The post சிங்கப்பூர் நீதித்துறையுடன் தேசிய நீதித்துறை அகாடமி ஒப்பந்தம் appeared first on Dinakaran.