×

ஜனாதிபதி முர்மு விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று, நாளை என 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஒன்றிய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

‘ஜி20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

The post ஜனாதிபதி முர்மு விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Delhi ,President ,Murmu ,CHENNAI ,Dravupati Murmu ,G20 ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...