
சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 36 பெண்கள், 161 ஆண்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 209 இளம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்றனர். இவர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மற்றும் கண்கவர் வீரதீர சாகச நிகழ்சிகள் நேற்று நடந்தது. பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள், நீளம் தாண்டுதல், தடைகளை தாண்டுதல், நெருப்பு வளையத்தில் புகுந்து வருதல், தலைகீழாக குட்டிக்கரணமிடுவது போன்ற சாகசங்கள், தற்காப்பு கலை மூலம், எதிரிகளின் தாக்குதலை தடுக்கும் முறைகளை தத்ரூபமாக செய்து அசத்தினர்.நிகழ்ச்சியையொட்டி, டிரோன் பறந்து வந்து மலர்களை தூவியது.
ஆள் இல்லாத குட்டி விமான சாகசம், ரணுவத்தினரின் பைப்பிங் பேண்டு வாத்திய இசை நடனம், களரிப்பட்டு எனும் தற்காப்பு கலையில் வேல், கத்தி, ஈட்டி, சுருள் வாள், கேடயம், சிலம்பம் போன்ற ஆயுதங்களை கையாள்வது, பதுங்கு குழிகளை அழித்து, தேசப்பற்றை உணர்த்துவது போன்ற காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. நிகழ்ச்சியை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் சவ்கான், உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். பின்னர், சாகச நிகழ்சிகளை செய்த குழு தலைவர்களுக்கு, தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் சவ்கான் நினைவு பரிசு வழங்கினார்.
The post ராணுவ வீரர்கள் பயிற்சி நிறைவு appeared first on Dinakaran.