×

விநாயகர் சதுர்த்தியையொட்டி நியாயவிலை கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு வரும் 18ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 17ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வரும் 18ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 18ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விநாயகர் சதுர்த்தியையொட்டி நியாயவிலை கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi ,Tamil Nadu Government ,Chennai ,
× RELATED எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய்...