×

இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு ஆப்பிள் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ80 முதல் விற்பனை

சேலம்: இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 60 டன் ஆப்பிள் வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் இமாசல பிரதேசம், காஷ்மீரில் அதிகளவில் ஆப்பிள் செடிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் ஆப்பிள் விளைச்சல் அமோகமாக இருக்கும். தற்போது இமாசல பிரதேசம், காஷ்மீரில் ஆப்பிள் அமோக விளைச்சல் தந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து இந்தியா முழுவதும் ஆப்பிள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில், இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து நாள் ஒன்றுக்கு சேலம் மார்க்கெட்டுக்கு 50 முதல் 60 டன் ஆப்பிள் விற்பனைக்கு வருகின்றன.

இங்கு விற்பனைக்கு வரும் ஆப்பிளை நாமக்கல், மேட்டூர், ஆத்தூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆப்பிள் சீசன் களை கட்டியுள்ளதால், விலை சரிந்து உள்ளது. கடந்த ஜூலையில் ₹ 140 முதல் ₹ 160க்கு விற்ற ஒரு கிலோ ஆப்பிள், தற்போது ரூ 80 முதல் ரூ 100 என விற்கப்படுகிறது. சிறிய ரக ஆப்பிள் ₹60 முதல் ₹70 என விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு ஆப்பிள் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ80 முதல் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh, ,Kashmir ,Salem ,Salem market ,Himachal Pradesh, Kashmir ,Dinakaran ,
× RELATED குத்துச்சண்டை போட்டி: மாணவருக்கு தங்கப்பதக்கம்