×

“தி சென்னை க்விஸ்” வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்: சென்னை மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட “தி சென்னை க்விஸ்” மாபெரும் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரைப் பாராட்டி மேயர் ஆர்.பிரியா ரொக்கப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை இன்று வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் சார்பில் செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட “தி சென்னை க்விஸ்” மாபெரும் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியரைப் பாராட்டி மேயர் ஆர்.பிரியா இன்று (08.09.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரொக்கப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் சார்பில் “சென்னையும், பெருநகர சென்னை மாநகராட்சியும்” என்ற தலைப்பில் மாபெரும் வினாடி வினாப் போட்டியானது, 05.09.2023 அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவிலும், 07.09.2023 அன்று தனியார் பள்ளிகள் அளவிலும், 08.09.2023 அன்று சென்னை பள்ளிகள் அளவிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்டது. சென்னை பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டியில் புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவியர் எஸ். மாலினி மற்றும் பி.கே.சஹானாஶ்ரீ முதல் இடத்தையும், அடையாறு, காமராஜ் அவென்யூ-சென்னை உயர்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் இ.கேஷ்ரியா மற்றும் டி.சிவராமகண்ணன் இரண்டாம் இடத்தையும், விருகம்பாக்கம்-சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் ஆர்.தினேஷ் குமார் மற்றும் எம்.எஸ்.முகமது ராயிஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டியில் பி.சி.கே.ஜி. அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் எம். சிலம்பரசன் மற்றும் வி.எஸ்.தர்மேந்திரன் முதல் இடத்தையும், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவியர் எஸ்.எம். மதுவதனி மற்றும் டி.ஹேமா புஷ்பிகா இரண்டாம் இடத்தையும், பெருங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் எச்.ராகவன் மற்றும் பி.ஞானவேல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டியில் கே.கே.நகர்-பி.எஸ்.பி.பி. சீனியர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் ஒய்.ஈஸ்வர் மற்றும் ஆதித்யா சரவணன் முதல் இடத்தையும், மயிலாப்பூர் வித்யாமந்திர் சீனியர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் அர்ஜூன் தீபக் மற்றும் கே.சர்வேஷ் இரண்டாம் இடத்தையும், கே.கே.நகர் பி.எஸ்.பி.பி. சீனியர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் பி.பி.அச்யுதா ராம் மற்றும் கே.வேதாந்த் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் சென்னை பள்ளிகள் அளவிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவிலும், தனியார் பள்ளிகள் அளவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7,000/-, மூன்றாம் பரிசாக ரூ4,000/- ரொக்கப் பரிசுகளும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் இன்று (08.09.2023) மேயர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post “தி சென்னை க்விஸ்” வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்: சென்னை மேயர் பிரியா வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : The Chennai Quiz ,Chennai Mayor Priya ,Chennai ,Metropolitan Chennai Corporation Chennai School ,
× RELATED புயல் எச்சரிக்கை எதிரொலி:...