×

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்று கூடி எதிர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் மலையாளி கிளப் நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பத்திரிகையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய “The Changing Mediascape” புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய அவர்; தி சேஞ்சிங் மீடியா ஸ்கேப் என்ற புத்தகத்தை வெளியிடுவதிலே பெருமை கொள்கிறேன். ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாள அகாடமி முக்கிய பங்காற்றுகிறது. இந்த விழாவில் பங்கேற்றதில் நான் பெருமை அடைகிறேன். கலைஞருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் பத்திரிகையாளர் அருண்ராம்.

ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். தற்போது, பத்திரிகை துறையில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். நாம் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவை பாதுகாக்க, அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார்.

இன்று, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்துள்ளது. தமிழ்நாடும் கேரளமும் நாட்டை காக்கும் முயற்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும். இந்தியாவை காப்பாற்ற நாங்கள் பாடுபடுகிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்று கூடி எதிர்க்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற ஊடகங்களும், சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்று கூடி எதிர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : India ,CM ,B.C. G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Malayalam Club ,Sethepatti ,G.K. Stalin ,B. R.R. GP ,Basker ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...