×

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் “மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் “மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் செப்.12-ல் நடிகர் விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர். லைக்காவுக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.

The post லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் “மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Laika ,Chennai High Court ,Chennai ,Leica ,High Court ,Leica Institute ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு...