×

திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான மாரிமுத்து மறைவு: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

சென்னை: நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் நடித்து அசத்தி வந்த இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான மாரிமுத்து உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சூரி, பிரசன்னா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கவிஞர் வைரமுத்துவின் மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாரிமுத்து உடலுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நாசர், சரத்குமார், ரோபோ சங்கர், ராஜேஷ், இயக்குனர் வசந்த், எஸ்வி சேகர், முனீஸ்காந்த், வையாபுரி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சத்யபிரியா, எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மற்றும் அந்த தொடரில் நடித்துள்ள சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் புகழ், ரவி மரியா, சென்ட்ராயன், தீபா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

The post திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான மாரிமுத்து மறைவு: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : marimuthu ,Chennai ,Adi Gunasekaran ,
× RELATED முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய இளைஞருக்கு வலை