×

ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் மார்க்சிஸ்ட் சாலை மறியல்

*212 பெண்கள் உள்ளிட்ட 608 பேர் கைது

தூத்துக்குடி : ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஒரே நாளில் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 212 பெண்கள் உள்ளிட்ட 608 பேரை போலீசார் கைது செய்தனர்.விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பல லட்சம் கோடி ஊழல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே தலைமை தபால் நிலையம் முன்பாக நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ராஜா, சண்முகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சங்கரன், ராஜா, முத்து, ராகவன், காசி, கணபதி சுரேஷ், வின்சென்ட், சித்ரா தேவி, உள்ளிட்ட 54 பெண்கள் உள்ளிட்ட 154 பேர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட இவர்களை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பாக நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிமுத்து, அப்பாதுரை, மாவட்டகுழு உறுப்பினர் முத்து குமார், ஜேசு மணி, உள்ளிட்ட 38 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ரவீந்திரன் மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், விஜயலட்சுமி, சாலமன், ஜோதிபாசு, ஜோதி மணி, கிருஷ்ணவேணி, ஜீவராஜ் உள்ளிட்ட உள்ளிட்ட 106 பெண்கள் உள்ளிட்ட 254 பேர் பங்கேற்றனர். இவர்களை கோவில்பட்டி போலீசார் கைது செய்தனர்.

வைகுண்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பூமயில் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் நம்பிராஜன், ரவிச்சந்திரன், மணி, மாரியப்பன் மற்றும் 30 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 4 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 212 பெண்கள் உள்ளிட்ட 608 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் மார்க்சிஸ்ட் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,union government ,Tuticorin ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED மூச்சுத்திணறலால் நடிகர் திடீர் மரணம்