×

கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் அபார வெற்றி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றார். மறைந்த உம்மன்சாண்டியின் சட்டமன்ற தொகுதியான புதுப்பள்ளியில், இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்நிலையில் கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றார். 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க்சி தாமஸை சாண்டி உம்மன் தோற்கடித்தார். சாண்டி உம்மன் 78,098 வாக்குகள், ஜெய்க்சி தாமஸ்-41,644, பாஜக வேட்பாளர் லிஜின் லால் 6,447 வாக்குகள் பெற்றனர்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவை அடுத்து புதுப்பள்ளி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது நினைவுகூரத்தக்கது. 12 முறை புதுப்பள்ளியில் வெற்றி பெற்ற உம்மன் சாண்டி காட்டிலும் அவரது மகன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 50 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்துள்ளது.

 

The post கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் அபார வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Umman Sandy ,Kerala State ,Pudupalli Assembly Constituency ,Thiruvananthapuram ,Umman Sandi ,Sandy ,Kerala state Pudupalli ,Assembly ,Umman ,Kerala State Pudupalli Assembly Election ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...