×

7 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவு: பாஜக கூட்டணி 4; ‘இந்தியா’ கூட்டணி 3 இடங்களில் முன்னிலை

புதுடெல்லி: ஆறு மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 4 இடங்களிலும், இந்தியா கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகித்தன. கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்எல்ஏ தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அந்த இடம் காலியானது.

மற்ற தொகுதிகளின் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. ஆறு மாநிலங்களில் 7 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பகல் 1 மணி நிலவரப்படி பாஜக மற்றும் கூட்டணி 4 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி தலா ஒரு இடங்களிலும் (இந்தியா கூட்டணி) முன்னிலை வகித்தன. இன்று மாலை 5 மணியளவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். மதியம் நிலவரப்படி திரிபுராவில் இரு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும், கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

The post 7 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவு: பாஜக கூட்டணி 4; ‘இந்தியா’ கூட்டணி 3 இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Bajak Alliance ,India' Alliance ,New Delhi ,Indian Alliance ,India Alliance ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்