×

இயக்குனரும் நடிகருமான எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை : இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. டப்பிங் முடித்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பிய போது இயற்கை எய்தினார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து.பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிகராக நடித்து வந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து.வாலி, உதயா, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தவர் இவர்.

தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்த மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்துள்ளார். ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இயக்குனர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.2011ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் மாரிமுத்து.மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இயக்குனரும் நடிகருமான எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Marimuthu ,Chennai ,
× RELATED கோயில் கேட் பிரச்னையில் தகராறு இரு தரப்பை சேர்ந்த 6 பேர் கைது