×

மணிப்பூர் மாநிலம் மோரே நகரத்தில் தமிழர்கள் வெளியேற்றப்படுவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு


மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் மோரே நகரத்தில் தமிழர்கள் வெளியேற்றப்படுவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மோரே நகரத்தில் மற்ற இன மக்களுடன் தமிழர்கள் இணக்கமாக வாழ்ந்து வருவதாக தமிழ்ச் சங்கம் விளக்கம் அளித்துள்ளனர். மோரே நகரத்தை விட்டு தமிழர்கள் வெளியேற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று மணிப்பூர் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2 நாட்களாக 7 மாவட்டங்களில் இனக்குழுக்கள் மற்றும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

The post மணிப்பூர் மாநிலம் மோரே நகரத்தில் தமிழர்கள் வெளியேற்றப்படுவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Moray ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்