×

மக்களை அழ விட்டு அழகு பார்க்கும் மோடி… ஜி20 மாநாட்டிற்காக குடிசைகள் புல்டோசர்களால் தரைமட்டம்.. செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனம்!!

டெல்லி : டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடிசைகள் பகுதிகள் துணியால் மூடப்பட்டு இருப்பது விமர்சனங்களை கிளம்பியுள்ள நிலையில், சில இடங்களில் குடிசைகளை புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நாளை முதல் 2 நாட்களும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், டெல்லியை அழகாக காட்டுவதற்கு குடிசைகளை துணியை கொண்டு மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சில முக்கிய பகுதிகளில் உள்ள குடிசைகளை புல்டோசர்களை கொண்டு இடிக்கும் பணியை டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

டெல்லியை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக இந்த குடிசைகளை அகற்றவில்லை என்றும் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதால் அகற்றுவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ள டெல்லி அமைச்சர் கவுஷல் கிஷோர், 4 மாதங்களில் 49 முறை சட்டவிரோத குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். குடிசைகள் இடிக்கப்பட்டு வருவது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மக்களை அழ விட்டு அழகு பார்க்கும் மோடி… ஜி20 மாநாட்டிற்காக குடிசைகள் புல்டோசர்களால் தரைமட்டம்.. செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனம்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,G20 ,Reuters ,Delhi ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...