×

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம்

உசிலம்பட்டி, செப். 8: உசிலம்பட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் சகுந்தலா முன்னிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு வலி, கழுத்து வலி, குழந்தைகள் கால் வளைவு சிகிச்சை, நீண்ட நாள் எலும்பு சேராமல் இருப்பதற்கான சிகிச்சை, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, கர்ப்பிணிகளுக்கான சிறப்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உசிலம்பட்டி வட்டார மருத்துவர் டாக்டர் சுசிலா நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கினார். இந்த முகாமில் உசிலம்பட்டியை சுற்றியுள ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Tamil Nadu ,Chief Minister ,Urban Primary ,Health Center ,Usilambatti ,
× RELATED தொலைதூர கிராம மக்களும் 1962க்கு...