×

பட்டிவீரன்பட்டி 9வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணி துவக்கம்

பட்டிவீரன்பட்டி, செப். 8: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி 9ம் வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் மேற்கு பகுதியில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லைை. இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி குடியிருப்புவாசிகள் நடப்பதற்கும், டூவீலர்களில் செல்வதற்கும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் சாலை வசதி செய்து தர கோரி பேரூராட்சி மன்றத்திலும், அப்பகுதி கவுன்சிலரிடமும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் கல்பனாதேவி, நகர செயலாளர் அருண்குமார், கவுன்சிலர்கள் ரத்தினவேல், அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பட்டிவீரன்பட்டி 9வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti 9th Ward Paver ,Pattiveeranpatti ,Annanagar West ,9th Ward ,Pattiveeranpatti Municipality ,Pattiveeranpatti 9th Ward Paver Block ,Dinakaran ,
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்