×

குண்டடம் முதல் மேட்டுக்கடை வரை நான்கு வழிச்சாலை போக்குவரத்து சேவை

தாராபுரம், செப்.8: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் குண்டடம் முதல் மேட்டு கடை வரை இருவழிச்சாலையாக செயல்பட்டு வந்தது. போக்கு வரத்து நெரில்காரணமாக இதனை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.53.40 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் இந்த நான்கு வழிச்சாலையை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்ற திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். தாராபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய நான்கு வழிச்சாலையின் போக்குவரத்து சேவையை கொடியை அசைத்து வைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாநில நெடுஞ்சாலை எண் 174 ஏ குண்டடம் முதல் மேட்டுக்கடை வரை ரூ.29.40 கிமீ., தூரத்திற்கும், ரூ.53.40 கோடி செலவில் ஏற்கனவே இருந்த இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு ேசவை துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 13 கிமீ சாலை ரூ.93.90 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. மேலும் 11.80 கிமீ நீளமுள்ள சாலை ரூ.115 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இச்சாலையை பயன்படுத்துவதன் மூலம் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செல்லும் பொது மக்களின் பயண நேரம் குறைவதுடன் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார் நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்திலரசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி, திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், உதவி செயற்பொறியாளர் சித்ரா, உதவி பொறியாளர் பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post குண்டடம் முதல் மேட்டுக்கடை வரை நான்கு வழிச்சாலை போக்குவரத்து சேவை appeared first on Dinakaran.

Tags : Gundadam ,Mettukada ,Tarapuram ,Coimbatore ,Tirupur ,Gundam ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது