×

திருச்சி அரசினர் ஐடிஐ.ல் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் கலந்துகொள்ள அழைப்பு

திருச்சி, செப்.8: திருச்சி மாவட்டத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும் 11ம் தேதி காலை 10 மணி அளவில் திருச்சி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநா்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் செப்.11ம் தேதி காலை 10 மணி அளவில் திருச்சி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்த சோ்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவா்கள் மற்றும் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐடிஐ பயிற்சியாளா்கள், 8ம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,12ம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த ஆண், பெண் இருபாலினரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் 200க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ₹7 ஆயிரத்து 700 முதல் ₹12 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.

தொழிற்பழகுநா் சட்டம் 1961ன்படி இந்த நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவா்கள் இந்த சோ்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் தகவல்களுக்கு திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நோிலோ அல்லது 94436 44967 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி அரசினர் ஐடிஐ.ல் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் கலந்துகொள்ள அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Trichy ,ITI ,Trichy ,Trichy government ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின்...