×

திருச்சி மாநகர பகுதியில் கொட்டித்தீர்த்த மழை திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்

திருச்சி, செப்.8: திருச்சி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் உள்ள நுகர்வோர்களின் குறைகளை களைய குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், தனி வட்டாட்சியா்கள்,வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி கிழக்கு – கே.கே.நகர் -1 (13JC087PN), திருச்சி மேற்கு – டிவிஎஸ் 2 (13AF020PN), திருவெறும்பூர் – அம்மன்நகர் (13AP057PN), ரங்கம் – சாந்தபுரம் (13BP069PN), மணப்பாறை – கத்திகாரன்பட்டி (13CPO08P1), மருங்காபுரி – தாளம்பாடி(13CP052PN), லால்குடி – பெருவளப்பூர் -1 (13DP072PY), மண்ணச்சநல்லூர் – செங்குழிப்பட்டி (13EP020P1), முசிறி – முத்தையநல்லூர்(13FP019P1), துறையூர் – மினி சூப்பர் – 2(13GH005PN), தொட்டியம் – ஏலூர்பட்டி (13HP071PY) ஆகிய நியாயவிலைக்கடைகள் மூலம் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். எனவே இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post திருச்சி மாநகர பகுதியில் கொட்டித்தீர்த்த மழை திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy Metropolitan Area ,Trichy ,Trichy District ,Dinakaran ,
× RELATED ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற...