×

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வேண்டும் மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம்

வேதாரண்யம், செப்.8: வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜூலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, வனிதா, ஜானகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பள்ளி காலை உணவுத் திட்டத்தை தினமும் இரு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வீதம் பார்வையிட்டு ஆலோசனை வழங்குவது. புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டத்திற்கு முழு பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவது. தற்போது நடைபெற்று வரும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தி பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் அனிதா நன்றி கூறினார்.

The post பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வேண்டும் மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Union Thoputura Panchayat Union Primary School School Management Committee ,President ,Nishanthi ,
× RELATED வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியது