×

தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் 108 ஆம்புலன்ஸ் சேவை மருத்துவஉதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு

கரூர், செப்.8: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் வரும் 10ம்தேதி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாவது: 108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், மற்றும் காவல், தீ ஆகிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாக உள்ளது. இந்த சேவை பொதுமக்களுக்கு 24மணி நேரமும் கிடைக்கும் வகையில் செயல்படுகிறது. தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் மற்றொரு நிறுவனத்துடன் அவசர கால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது.

தனியார் நிறுவனம் மூலம் ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. 12 மணி நேர ஷிப்ட் முறையில் பணி. இஎம்டி பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ் கிராஜூவுட் (பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஷ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி படித்திருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகம் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும் (பயிற்சி காலத்தில தங்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும்) வேலை வாய்ப்பு முகாம் கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் செப்டம்பர் 10ம்தேதி காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் 108 ஆம்புலன்ஸ் சேவை மருத்துவஉதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thanthonimalai Government College of Arts ,Karur ,Dandonimalai Government Arts College ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...