×

அண்ணா பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு15ம்தேதி பேச்சுப் போட்டி

கரூர், செப்.8: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2023ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காலை 9.30 மணி முதல் 1மணி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்படவுள்ளது.அண்ணாவும் மேடைப்பேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

கல்லூரி, மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வழியாக பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு கரூர் தமிழ் வளர்ச்சி உதவி இயககுநர் அலுவலக தொலைபேசி எண்ணில் 04324-255077 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணா பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு15ம்தேதி பேச்சுப் போட்டி appeared first on Dinakaran.

Tags : Anna ,Karur ,Karur District ,Collector ,Prabhu Shankar ,Karur District Tamil Development Department ,
× RELATED கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்...