×
Saravana Stores

ஐஐடி- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் கூட்டு பயிற்சி: விபத்தில் இறப்பை குறைக்க நடவடிக்கை; கூடுதல் கமிஷனர் சுதாகர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் சாலை விபத்துகளை குறைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் 347 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு நடவடிக்கையால், இந்த ஆண்டு அது 330 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னை ஐஐடி சாலை பாதுகாப்பு சிறப்பு மையத்துடன் இணைந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு நடத்த கூடுதல் கமிஷனர் சுதாகர் ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றும் 25 காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த புலனாய்வு குழுவானது சென்னையில் அதிகளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று எதனால் இந்த இடத்தில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. விபத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, வாகன ஓட்டுநர்களிடம் ஆலோசனை நடத்துவது, தொடர் விபத்துகள் ஏற்படும் இடத்தில் உள்ள சாலையின் நிலை போன்றவற்றை நேரில் ெசன்று விசாரணை செய்யும்.

இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐஐடி சாலை பாதுகாப்பு சிறப்பு மையத்தின் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவால் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியின் போது, ‘ரூட் கேஸ் அனாலிசிஸ் மேட்ரிக்சை’ பயன்படுத்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஐஐடி- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் கூட்டு பயிற்சி: விபத்தில் இறப்பை குறைக்க நடவடிக்கை; கூடுதல் கமிஷனர் சுதாகர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : IIT- Traffic Intelligence Division Police ,Sutagar ,Chennai ,Sandip Roy Rathore ,Chennai City Police ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது