×

600 பேர் பங்கேற்கும் மண்டல கிராமிய விளையாட்டு போட்டிகள் வாலாஜாவில் 10ம் தேதி நடக்கிறது ஈஷா கிராமோத்சவம் சார்பில்

வேலூர், செப். 8: ஈஷா கிராமோத்சவம் சார்பில் மண்டல அளவிலான கிராமிய விளையாட்டு போட்டிகள் வாலாஜாவில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. 10 மாவட்டங்கள் பங்கேற்கும் கிராமிய விளையாட்டு போட்டிகள் குறித்து ஈஷா கிராமிய விளையாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் நகுஜா ேவலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 15வது ஈஷா கிராமிய விளையாட்டு திருவிழா தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதற்கட்ட போட்டிகள் முடிவடைந்து மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெற உள்ளது. இதில் 28 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த போட்டியில் தகுதி பெறும் அணிகள், கோவையில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்கும். போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உணவு மற்றும் பயணச்செலவுகளை ஈஷா ஏற்றுக்கொள்ளும். இறுதிபோட்டியில் ெவற்றி பெறும் வீரர்களுக்கு ஈஷா ஆதியோகி ₹55 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது விளையாட்டு வீரர்கள் ஜம்பு, அப்பாஸ், ஈஷா செய்தி தொடர்பாளர் பிரதீப் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post 600 பேர் பங்கேற்கும் மண்டல கிராமிய விளையாட்டு போட்டிகள் வாலாஜாவில் 10ம் தேதி நடக்கிறது ஈஷா கிராமோத்சவம் சார்பில் appeared first on Dinakaran.

Tags : Wallaja ,Isha Gramotsavam ,Vellore ,Walaja ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...