×

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலருக்கு மிரட்டல் தந்தை, மகன் மீது வழக்கு

ஸ்பிக்நகர், செப். 8: தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். தூத்துக்குடி ஸ்பிக்நகர் அடுத்த முள்ளக்காடு சாமிநகரைச் சேர்ந்த முனியசாமி மகன் மணிகண்டன் (30). தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் சுகாதார பிரிவு மேற்பார்வையாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஸ்பிக்நகரில் இறைச்சி கடை நடத்தி வரும் தஸ்நேவிஸ்நகரைச் சேர்ந்த சந்தனராஜ் (50), அவரது மகன் அழகு மார்க்கண்டன் ஆகிய இருவரும் இறைச்சி கழிவுகளை மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைக்காமல் அங்குள்ள பொது இடத்தில் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வியாபாரி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் மாநகராட்சி அலுவலர் மணிகண்டன் விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மாநகராட்சி அலுவலர் மணிகண்டனை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலைமிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் சந்தனராஜ், அவரது மகன் அழகு மார்க்கண்டன் உள்ளிட்ட இருவர் மீதும் முத்தையாபுரம் எஸ்.ஐ. அல்லி அரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதே போல் அழகு மார்க்கண்டன் கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி அலுவலருக்கு மிரட்டல் தந்தை, மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Corporation ,Spiknagar ,Thoothukudi ,
× RELATED அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே...