×

அரசு பஸ் மோதி அங்கன்வாடி ஊழியர் பலி

ஓசூர், செப்.8: சூளகிரி அருகே அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவரது மனைவி அலமேலு(58). இவர் அத்திமுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி இரவு, ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே அலமேலு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார், அவரது உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் மோதி அங்கன்வாடி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Venkateshappa ,Athimugam ,Choolagiri ,Alamelu ,Athimugam Government Higher Secondary School ,Anganwadi ,
× RELATED கணவர் ஓட்டிய டிராக்டரில் சிக்கி மனைவி பரிதாப பலி