- ஏசியான்
- பிரதமர் மோடி
- ஜகார்த்தா உச்சி மாநாடு
- ஜகார்த்தா
- மோடி
- இந்தியா
- ஆசிய உச்சி மாநாடு
- பிற்பகல்
- தின மலர்
ஜகார்த்தா: இந்தியா, ஆசிய நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு 12 முன்மொழிவுகளை ஏசியன் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று அதிகாலை ஜகார்த்தா சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜகர்த்தாவில் உள்ள ஓட்டலில் பிரதமர் ஓய்வெடுத்தார். அங்கு திரண்ட இந்தியா வம்சவாளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து ஜகர்த்தாவில் நடந்த இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி, ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை பட்டியலிடுவது குறித்து ஆசியன் நாடுகளின் தலைவர்களுடன் விரிவாக விவாதித்தார். தொடர்ந்து மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இணைப்பு, டிஜிட்டல் மாற்றம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு, சமகால சவால்களை எதிர்கொள்வது, மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியா- ஆசியான் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 12 அம்ச முன்மொழிவை பிரதமர் முன்வைத்தார்.
முன்மொழிவின் கீழ், தென் கிழக்கு ஆசியா-இந்தியா-மேற்காசியா-ஐரோப்பாவை இணைக்கும் மல்டி-மாடல் இணைப்பு மற்றும் பொருளாதார வழித்தடத்தை நிறுவுவதற்கும், தீவிரவாதம், தீவிரவாத நிதியுதவி மற்றும் இணைய -தவறான தகவல்களுக்கு எதிராக கூட்டாக இணைந்த போராட்டத்துக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து 18வது கிழக்கு ஆசிய மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார். மாநாட்டில், தீவிரவாதம், பருவநிலை மாற்றம், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோக சங்கிலி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பான அணுமுறைக்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார். பின்னர் ஜகார்த்தாவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார்.
* புதிய தூதரகம் திறப்பு
இந்தியா-ஏசியன் மாநாட்டில் பேசிய பிரதமர், திமோர் லெஸ்டியின் தலைநகர் டில்லியில் இந்தியாவின் தூதரகத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
The post இந்தியா- ஆசியான் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: ஜகார்தா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.