×

மக்களவை தேர்தலில் ஹாவேரி தொகுதியில் பொம்மை போட்டி: பாஜ மேலிடம் முடிவு

பெங்களூரு: மக்களவைக்கு அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ்பொம்மையை களத்தில் நிறுத்த பாரதிய ஜனதா கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. கர்நாடகா சட்டபேரவை தேர்தல் முடிந்தபின் டெல்லி பக்கம் தலைகாட்டாமல் இருந்த முன்னாள் முதல்வர் பசவராஜ்பொம்மை, கடந்த வாரம் டெல்லி சென்றபோது, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது பேரவை தேர்தலில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட முக்கிய காரணமாக இருந்த அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது சட்டபேரவை தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் முடியும் நிலையில், இன்னும் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யாமல் இருப்பது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல், பாஜ தலைவர்களும் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக பேரவை மற்றும் மேலவை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக கட்சி பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி, அதில் எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இந்நிலையில் மக்களவைக்கு அடுத்தாண்டு நடக்கும் பொது தேர்தலில் தேர்தலில் பிரபலமானவர்களை வேட்பாளர்களாக களத்தில் நிறுத்த பாஜ தலைமை யோசித்து வருகிறது. அந்த பட்டியலில் ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ்பொம்மையை களத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக தான் கர்நாடக மாநில சட்ட பேரவை எதிர்க்கட்சி தலைவராக பொம்மையை தேர்வு செய்யாமல் காலம் கடத்தி வருவதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

The post மக்களவை தேர்தலில் ஹாவேரி தொகுதியில் பொம்மை போட்டி: பாஜ மேலிடம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Haveri ,Bengaluru ,Bharatiya Janata Party ,CM ,Bhasavarajpomma ,Baja ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...