×

ஒன்றிய அமைச்சரின் மகன் துப்பாக்கி லைசென்ஸ் ரத்து

லக்னோ: ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு தரப்பட்ட துப்பாக்கி லைசென்சை லக்னோ மாஜிஸ்திரேட் கோர்ட் ரத்து செய்துள்ளது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருப்பவர் கவுஷல் கிஷோர். கடந்த 1ம் தேதி லக்னோவில் இவரது மகன் விகாஸ் கிஷோர் வீட்டில் வினய் ஸ்ரீவத்சவ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த போது விகாஸ் கிஷோர் டெல்லியில் இருந்தார். இந்த கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி விகாஸ் கிஷோருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனால், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட், விகாஷ் கிஷோர் பெயரில் அளிக்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி லைசென்சை ரத்து செய்தார். துப்பாக்கியை போலீசிடம் ஒப்படைக்க விகாசுக்கு உத்தரவிட்டார்.

The post ஒன்றிய அமைச்சரின் மகன் துப்பாக்கி லைசென்ஸ் ரத்து appeared first on Dinakaran.

Tags : Union minister ,Lucknow ,Lucknow Magistrate Court ,Union ,Minister ,Dinakaran ,
× RELATED டீப் ஃபேக்கை கட்டுப்படுத்த புதிய...