×

2 புலிக்குட்டிகள் உயிரிழப்பு

சந்த்ரபூர்: மகாராஷ்டிராவில் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பலார்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட தோடோ-அந்தாரி புலிகள் சரணாலயத்தில், பிறந்து 4 மாதங்களே ஆன நிலையில், தனது 3 குட்டிகளை விட்டுவிட்டு தாய் புலி சென்று விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு இறந்து கிடந்த 2 புலிக்குட்டிகளின் உடல் கைப்பற்றப்பட்டது. அப்பகுதியில் சுற்றி திரிந்த பெண் புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர். இக்குட்டி சந்திரபூரில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாய் புலியைத் தேட 5 தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post 2 புலிக்குட்டிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrapur ,Thodo-Antari ,Tigers ,Sanctuary ,Palarpur Forest ,Chandrapur district, Maharashtra ,
× RELATED சிறுவலூர் வன்கொடுமை சம்பவத்தில் 20 பேரை கைது செய்ய வேண்டும்