×

கொடநாடு கொலை வழக்குனு சொன்னாலே இலை கட்சி தலைவர் குலைநடுக்கத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையால் யாருக்கு நடுக்கம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மம்மியோட கொடநாடு பங்களாவில் நடந்த மர்டர் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கு. அந்த பங்களாவுக்குள் புகுந்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை இலை கட்சி தொண்டர்களுக்கு காட்ட வேண்டும் என்கிறார்களாம் கட்சியின் மற்ற தலைவர்கள். இந்நேரத்துல மம்மியோட கார் டிரைவரான கனகமானவரின் அண்ணன் புதுசு புதுசா பல தகவல்களை வெளியிட்டு சேலம்காரர் மற்றும் உண்மை குற்றவாளிகள் குலைநடுக்கத்தில் இருக்காங்களாம். இலைக்கட்சியோட முக்கிய புள்ளிகளின் பெயரை கூறி அக்கட்சியோட தலைவர்களை தினமும் டென்ஷன் ‘மோடுக்கு’ மாற்றி டிரைவரோட வைத்துள்ளாராம். அண்ணன். இந்த நேரத்துலத்தான் கனகமானவர் மம்மியோட கார் டிரைவரே கிடையாதுன்னு திடீரென குண்டை உருட்டிப்போட்டார் சேலம்காரர். அதெப்படி 6 ஆண்டுகளுக்கு பிறகு அது மம்மியோட டிரைவர் இல்ல, சின்னமம்மியோட டிரைவருன்னு சேலம்காரருக்கு இப்போதுதான் தெரிந்ததா… அவர் சொல்றது எல்லாமே பொய். அவர் போயஸ் மம்மியோட டிரைவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று அடித்து சொல்கிறார் கனகமானவரின் அண்ணன். இந்நிலையில தான் கூவத்தூரில் சேலத்துக்காரருக்கு முதல்வராக மகுடம் சூட்டப்பட்டது. சிறைக்கு சென்ற சின்ன மம்மி திரும்பி வந்தவுடன் பொறுப்பு ஒப்படைக்காமாலும், அவரை தன் பக்கம் சேர்க்காமலும் புறம் தள்ளிட்டாரு. தனக்கு வேண்டிய ஐவர் மூலமாக காய்களை நகர்த்தி கரன்சி மூலம் ஆட்சியை நடத்தினாரு. யார் வாய் திறந்தாலும் கரன்சியை கொடுத்து அடக்கி வைச்சுட்டாரு. இவ்வளவு செய்தும் தனக்கு எதிராக கனகமானவரின் அண்ணன் திடீரென முளைப்பார் என்று சேலம்காரர் எதிர்பார்க்கவில்லையாம். இந்நிலையில்தான், சேலத்துக்காரரிடம் இருக்கும் நிர்வாகிகள் சின்னமம்மியோட சிக்னலுக்காக வெயிட்டிங்காம். எந்நேரத்திலும் அணி தாவ தயாராக இருக்காங்க. இதை தடுக்க, சினிமா பாணியில சேலம்காரர் ஒரு பெரிய தந்திரத்தை கையாண்டதாக தேனிக்காரரின் ஆதரவளார்கள் நினைக்கிறாங்க. கொடநாடு பங்களா சின்ன மம்மிகிட்ட தான் இருக்கு. எந்தெந்த பொருள் எங்கு இருக்கும் என்பது அவருக்குத்தான் தெரியும். கனகமானவரும் அவரிடம் டிரைவராக இருந்தாரு. எனவே கனகமானவரை சின்னமம்மிதான் அனுப்பினாரு’ன்னு சொல்லி சிக்க வைக்க போடும் தந்திரம்தான்னு சொல்றாங்க… அந்த நேரத்தில் சின்னமம்மி வெளியே இருந்திருந்தால் முழு பழியையும் அவர் மீது போட்டிருப்பாங்க. இப்பகூட அவரை வெளியே வரவிடக்கூடாது என்பதில் உறுதியா இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிகாரரின் முடிவுக்கு குக்கர்காரர் எழுதிய முடிவுரை என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியதால் குக்கர்காரரின் தலைமையில் தேனிக்காரர் தனது ஆதரவாளர்களுடன் ஐக்கியமானார். இது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும் தேனிகாரர் என்னவோ டென்ஷனில் தான் இருக்கிறாராம். தன்னிடம் இருக்கும் கூட்டம், அப்படியே குக்கர் பக்கம் தாவிடுமோ என்ற பயம் தூங்கும்போதும் தேனிகாரரின் கனவில் அடிக்கடி எட்டி பார்க்குதாம். நெற்களஞ்சியத்திலும் தனக்கும் செல்வாக்கு அதிகம் இருப்பதாக காட்டி கொள்ள குக்கர் கட்சி சார்பிலும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தேனிக்காரர் அணி சார்பில் வைத்தியானவர் தலைமையிலான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால சேலம்காரரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்குள்ளானாங்க. நெற்களஞ்சிய மாவட்டத்திற்கு வந்திருந்த குக்கர்காரர், தொண்டர்களின் பல்ஸ் பார்ப்பதற்காக நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார். இது அவரது கட்சியினர் இடையே சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாம். திடீரென குக்கர் தலைமை ஏன் இவ்வாறு அறிவிக்க வேண்டும் என தேனிக்காரர் அணியினர் வீட்டில் தனியாக உட்கார்ந்து புலம்பி வருகிறாராம். தற்போது, தேனி-குக்கர் போராட்ட களத்தில் இணைந்துள்ளபோது, அதை தேர்தல் களம் வரை கொண்டு செல்லும் முடிவுக்கு குக்கர்காரர் முடிவுரை எழுதிவிட்டாரே என்று தேனிகாரர் நினைக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்குவாரிகளில் வசூல் டார்க்கெட் நிலவையும் தாண்டி போயிடுச்சாமே, அதை விவரமா சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் கிரஷர், கல் குவாரிகளில் ஏகப்பட்ட விதிமீறல் நடக்குதுனு அதிகாரிகள் மட்டத்துல பேச்சு ஓடுது. ஆனால், இந்த விஷயத்துல கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குறாங்களாம். அரசு நிர்ணயித்த அளவை தாண்டி, பல வருஷமா ஆழம், அகலம் என இஷ்டத்துக்கு தோண்டி, கல், மண் எடுப்பது இப்போதும் தொடருதாம். இந்த விதிமீறலை கண்டுபிடித்து பல கோடி ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவு போட்டாங்களாம் அதிகாரிங்க. ஆனால், அபராத தொகையை செலுத்தவில்லையாம். இதற்கிடையில், சினிமாக்காரர் என சொல்லிக்கொண்டு, நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒருவர், ஏழு எழுத்து பெயர் கொண்ட ஒருவர் என இரண்டு புரோக்கர்கள் களம் இறங்கி செம வசூல் பார்க்கிறார்களாம். மாநிலம் முழுவதும் 3,800 கிரஷர், குவாரிங்க எங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கு. நாங்க சொன்னா பல கோடி ரூபாய் பைன் போடுவாங்க, நீங்க கட்ட வேண்டியது வரும், அதற்கு பதிலா, நாங்க கேட்கிற கமிஷனை கொடுத்துட்டா தப்பிச்சுடலாம் என டயலாக் பேசி, கரன்சி கறக்கிறார்களாம். குறைந்தது ரூ.1 கோடிலிருந்து ரூ.5 கோடி ரூபாய் வரை ‘டார்கெட்’ வெச்சு வசூல் வேட்டை நடக்குது என்ற புலம்பல் லஞ்ச ஒழிப்பு துறை போயிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சியே வேண்டாம்னு ஓட்டம் பிடிக்ப்பது யாரு, எந்த கட்சியை விட்டு ஓடுறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மக்களவைக்கு விரைவில தேர்தல் வர உள்ளதால, அதற்கான பணிகள்ல கட்சிக்காரங்க தீவிரமாக இருக்காங்க. அந்த வகையில வெயிலூர் தொகுதியில தாமரை கூட்டணியை சேர்ந்த 3 எழுத்து பெயரை அடைமொழியாக கொண்டவரு போட்டியிட உள்ளதாக பரபரப்பாக பேசப்படுது. இதற்கு முன்னதாக தாமரை கட்சியோட ஸ்டேட் பிரசிடெண்ட் வெயிலூர் மாவட்டத்துக்கு பயணம் வர்றதாக சொல்றாங்க. இதனால கட்சி தலைமையில உள்ள முக்கிய நிர்வாகி தினமும், அசைன்மென்ட் கொடுத்து வர்றாராம். குறிப்பாக மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணியை சேர்ந்தவர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்னு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதனால, மாவட்ட பொறுப்புல இருக்குற நிர்வாகிங்களுக்கு மாவட்ட மேலிடம் மீது கடும் அதிருப்தியாம்.
உள்ளூர்ல என்ன நடக்குதுன்னு கூட புரியாம தலைமை தினந்தோறும் கட்சி நிர்வாகிங்களோட ஆலோசனை நடத்துவது நிர்வாகிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாம். குறிப்பாக சொந்த பணிகளை விட்டுவிட்டு கட்சி பணிகளை செய்றதால, வீட்ல இருக்குறவங்களும் மதிக்குறதில்லையாம். பலரும் கட்சியை விட்டு வெளியேறிவிடலாம்னு யோசிக்கிறாங்களாம். ஒரு கூட்டத்துல கலந்துட்டா கரன்சிகளை கண்ணில் காட்டினால் பிஸ்னஸ், வீட்டு பிரச்னையை சமாளிக்கலாம். எல்லாத்தையும் விட்டுட்டு கட்சிக்காக வர நமது ஆளும் கட்சியா, எதிர்கட்சியா.. தமிழ்நாட்டுல வளர்ந்து வரும் கட்சி தானே.. அதற்க கை காசு போட்டு போகணுமா என்று தாமரையின் குட்டி குட்டி நிர்வாகிகங்க யோசிக்க ஆரம்பிச்சு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post கொடநாடு கொலை வழக்குனு சொன்னாலே இலை கட்சி தலைவர் குலைநடுக்கத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : leaf party ,kodanadu ,wiki ,yananda ,Peter Uncle ,Mammyoda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...