×

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதம் 144 தடை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வரும் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக். 30ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க செப். 9ம் தேதி முதல் அக். 31 வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், 5 பேர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வரவும், ஜோதி ஓட்டங்கள் எடுத்து வரவும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, வெடிகள் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ் வசதி போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதம் 144 தடை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,Collector ,Vishnu Chandran ,Emanuel Segaran ,Paramakudi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...