×

இசுசு மோட்டார் பிக் அப் டிரக்

ஜப்பானைச் சேர்ந்த இசுசு மோட்டார்ஸ், டி மேக்ஸ் எஸ்-கேப் என்ற பிக் அப் டிரக் வரிசையில், புதிய அம்சங்களுடன் டாப் வேரியண்டான இசட் டிரிம்ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்டில் குரோம் கிரில்கள், இரட்டை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லாம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், பனி விளக்குகள், குரோம் பூச்சுடன் கூடிய கதவு பிடிகள் , 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் பயணிகள் பாதுகாப்புக்கான வசதிகளும் இடம் பெற்றுள்ளன. ஸ்பீடு சென்சார் கதவு லாக்குகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த பிக்அப் டிரக்கில் 2.5 லிட்டர் 4ஜெஏ1 டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 77.7 பிஎச்பி பவரையும், 176 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post இசுசு மோட்டார் பிக் அப் டிரக் appeared first on Dinakaran.

Tags : ISUZU MOTOR ,Isuzu Motors ,Japan ,Dinakaran ,
× RELATED 8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது