
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஏற்கனவே மேற்குவங்க எம்.எல்.ஏ.க்கள் ரூ.81,000 மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் தற்போது ரூ.1.21 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் அமைச்சர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக முதல்வர் மம்தா பானர்ஜி உயர்த்தியுள்ளார். முதல்வரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வெகுகாலமாக மம்தா பானர்ஜி முதல்வருக்கான ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மேற்கு வங்க மாநில எம்.எல்.ஏக்களின் ஊதியம் மிகவும் குறைவு. எனவேதான், அவர்களது ஊதியத்துடன் 40 ஆயிரத்தை அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மம்தா தெரிவித்துள்ளார்.
The post மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி..!! appeared first on Dinakaran.