
- புதுகிராமம் ரயில்வே கேட்
- நாகர்கோவில்
- புதுகிராமம் ரயில்வே கிராசிங் கேட்
- திருவனந்தபுரம்
- புதுகிராமம் ரயில்வே
- தின மலர்
நாகர்கோவில்: இரட்ைட ரயில் பாதை பணிக்காக புதுக்கிராமம் ரயில்வே கிராசிங் கேட் இன்று இரவு முழுவதும் முடப்படுகிறது. நாகர்கோவில் திருவனந்தபுரம், நாகர்கோவில் திருநெல்வேலி மார்க்கங்களில் இரட்டை ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில்வே கிராசிங் பகுதிகள் அடைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. தற்போது திருநெல்வேலி மார்க்கத்தில் தேரூர் புதுக்கிராமம் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக புதுக்கிராமம் ரயில்வே கிராசிங்கில் கேட், இன்று (7ம் தேதி) இரவு 9 மணி முதல் மறுநாள் (8ம் தேதி) காலை 6 மணி வரை மூடப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ரயில்வே கேட்டில் பேனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இரட்டை ரயில்பாதை பணி: புதுக்கிராமம் ரயில்வே கேட் இன்று இரவு முழுவதும் அடைப்பு appeared first on Dinakaran.