×

காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டுபலாத்காரம்: 2 வாலிபர்களுக்கு வலை


தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் தாளமுத்துநகரைச் சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் அடிக்கடி வெளியே சென்று சந்தித்து வந்துள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே ஒதுக்குப்புறமான இடத்திற்கு இருவரும் தனித்தனி பைக்குகளில் வந்து தனிமையில் சந்தித்துள்ளனர்.

அப்போது அங்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் இளம்பெண்ணின் காதலரை தாக்கி விரட்டியடித்துள்ளனர். அதன்பிறகு அந்த இளம்பெண்ணின் பைக் சாவியை பறித்துக் கொண்ட அவர்கள், அவரை தங்களது பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் தெற்கு பீச் ரோட்டில் உள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் அந்த இளம்பெண்ணை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு இளம்பெண்ணிடம் பைக் சாவியை ஒப்படைத்த அந்த வாலிபர்கள், அவரை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.

அதன்பிறகு அந்த இளம்பெண் அங்கிருந்து வந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இரு வாலிபர்களையும் தேடி வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம் காதலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டுபலாத்காரம்: 2 வாலிபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Instagram ,
× RELATED தூத்துக்குடி ஜிஹெச்சில் கலெக்டர் ஆய்வு