×

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி இடங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 34 இன்ஜினியர் பணியிடங்களுக்கு பி.இ., மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Deputy Engineer (Mechanical): 18 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1).
2. Deputy Engineer (Electronics): 16 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது மற்றும் தகுதி: வயது: 1.9.2023 தேதியின்படி 23க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.472/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு belgzbl@jobapply.in என்ற இ.மெயிலில் தொடர்பு கொள்ள வேண்டும். ‘‘https://jobapply.in/BEL2023/AUGDEGZB’’ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.9.2023.

The post பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Bharat Electronics ,Dinakaran ,
× RELATED சிக்கல்களைத் தீர்க்கும் அம்மன் வழிபாடு!