×

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: மதுரை – திருச்சி மார்க்கமாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். வரும் 16-ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை, வைகை அதிவிரைவு ரயில், இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வைகை அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டது முதல், ஸ்ரீரங்கம் மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இன்று தெற்கு ரயில்வேயின் அறிவிப்பினால் நிறைவேறியிருக்கிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 16ம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். அதுபோல, மலைக்கோட்டை விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநாத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மன்னார்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், மயிலாடுதுறை – மைசூரு விரைவு ரயில் புகழுர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Express ,Srianangam Railway Station ,Chennai ,Madurai ,Vaigai Express ,Trichy ,Sriangam railway station ,Railway ,
× RELATED மேல்மருவத்தூர்-விழுப்புரம் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து