×

சென்னையில் பரபரப்பு!: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி..!!

சென்னை: சென்னை ஆவடியில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆவடி பட்டாரம் பகுதியை சேர்ந்த மோசஸ் மற்றும் ஆவடி பகுதியை சேர்ந்த தேவன் ஆகிய இருவரும் ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கியதில் இருவரும் துடிதுடித்து மயங்கியுள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தேவன், மோசஸ் ஆகிய இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மயக்க நிலையில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் பரபரப்பு!: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Avadi, Chennai ,Aavadi Pattaram ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...