×

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

வாழை இலையை சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு அந்த இலையை நீக்கிவிட்டு தண்ணீரை அருந்தி வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.
பாதாம், பிஸ்தா பருப்புகளுக்கு இணையாக நிலக்கடலையிலும் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் இருக்கும் ரெஸ்வரெட்ரால் இதயத்தை பலப்படுத்துகிறது. நிலக்கடலையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு நீர்க்கட்டிகள், கருப்பை கட்டிகள் ஏற்படுவதில்லை. பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக வைக்கிறது.
அவரையில் இருக்கும் வைட்டமின் பி-1 இதயச் செயலிழப்பைக் குறைக்கிறது. உடல் பருமனைக் குறைக்க அவரைக்காயை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
ரோஜா இதழ்களை மென்றுதின்றால் வாய்ப்புண் குணமாகும்.
கறிவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி கொட்டுவது நிற்கும். கருமையாகவும் வளரும்.
முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி, மிளகு, சீரகப்பொடி சேர்த்து தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ஹிமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
சிறிதளவு கருஞ்சீரகத்தை எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து பூசினால் சிரங்கு, கரப்பான் நீங்கும்.
உளுந்து போண்டா செய்யும்போது, வேகவைத்த உருளைக் கிழங்கை தோல் நீக்கி அரைத்து செய்தால், போண்டா மெத்தென்று மிருதுவாக இருக்கும்.
சாம்பார், ரசம் போன்றவைகளில் தண்ணீருக்கு பதிலாக சாதம் வடித்த கஞ்சியை சேர்க்கலாம்.
ஒரு கப் கெட்டி அவல், இரண்டு கப் பச்சரிசி, சிறிது உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
இட்லி மாவு புளித்துவிட்டால் அதில் சிறிது நீர் விட்டு கலக்கி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவின்மீது தெளிவாக இருக்கும் தண்ணீரை வடித்து விட்டால் புளிப்பு போய்விடும்.
ரவையை மாவாக திரித்து அதில் வெல்லப்பாகு, தேங்காய்பூ துருவல் போட்டு பிசைந்து பிடித்து வைத்தால் வித்தியாசமான கொழுக்கட்டை தயார்.
– அ.ப.ஜெயபால்.

The post குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...