
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றி பார்க்கும் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுக்க, போதிய இருக்கைகள் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பலர் நீண்ட நேரம் புல்தரையில் அமர்ந்து ஓய்வெடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, கடற்ரை கோயிலில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அங்குள்ள ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, ஒன்றிய தொல்லியல் துறை சார்பில், நேற்று முதல்கட்டமாக கடற்கரை கோயில் வளாகத்தில் கருங்கல்லினால் ஆன போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் நேற்று அங்கு சுற்றுலாவுக்கு வந்த ஏராளமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், கடற்கரை கோயிலை தொடர்ந்து படிப்படியாக ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க கருங்கல் இருக்கை appeared first on Dinakaran.