×

நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார்

சென்னை: நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக மதுரவாயல் போலீசார் அழைத்து வந்தனர். சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

2011ம் ஆண்டு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் சீமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சுமுகமாக செல்வதாக கூறியதால் சீமானை போலீசார் கைது செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் சீமான் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் அவரை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகாரளித்தார்.

இதனடிப்படையில் மீண்டும் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், விஜயலட்சுமியிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டார். மேலும் திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்நிலையில் தன்னை 6 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் மதுரவாயல் போலீசார் விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கருக்கலைப்பு செய்யப்பட்ட மருத்துவரிடமும், கருக்கலைப்பு செய்வது தொடர்பாக கையெழுத்திட்ட நபரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

The post நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Obedient Government Hospital ,Chennai ,Maduravayal ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...