×

காலம் அறிந்து பயிர் செய்வோம்!

பயிர்த்தொழிலுக்கு ஏற்ற மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் நிலத்தை பண்படுத்தி பல விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் இனி வரும் காலத்தில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம்? இதோ சில பயனுள்ள தகவல்கள்:ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தை முன் சம்பா பட்டம் என வகைப்படுத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர். இந்த பட்டத்தில் 130 நாட்கள் முதல் 135 நாட்கள் வயதுடைய பயிர்களை சாகுபடி செய்யலாம். தற்போது பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆர்கானிக் ஸ்டோர்களில்தான் இந்த ரக அரிசிகள் முன்பெல்லாம் விற்பனை செய்யப்பட்டன. இப்போது சாதாரண மளிகை கடைகளில் கூட இந்த அரிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஓட்டல்களிலும் பாரம்பரிய ரக அரிசியால் செய்யப்பட்ட சாப்பாடு என விளம்பரப்படுத்தி மார்க்கெட்டிங் செய்கிறார்கள். இதனால் இந்த சமயத்தில் தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச்சம்பா, சிவப்பு கவுனி உள்ளிட்ட 130 முதல் 140 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களைப் பயிரிடலாம்.

இந்த சமயத்தில் வேலூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த விவசாயத்தை மேற்கொள்ளலாம். அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான பருவத்தை பின்தாளடி பட்டம் என்கிறார்கள். இந்த சமயத்தில் 115 முதல் 120 நாட்கள் வயதுடைய குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிட தோதாக இருக்கும். அன்னமழகி, குள்ளக்கார் உள்ளிட்ட நெல் ரகங்களைப் பயிரிடலாம். இந்த சீசனில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.

The post காலம் அறிந்து பயிர் செய்வோம்! appeared first on Dinakaran.

Tags : Audi ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...