சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,535 கனஅடியில் இருந்து 3,031 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 47.33 அடியிலிருந்து 46.81 அடியாக சரிந்து நீர் இருப்பு 15.86 டிஎம்சியாக உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத காரணத்தினால் காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழக்கமாக திறந்து விடப்படும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நதி நீர் ஆணையம் வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
கர்நாடக அரசு கடந்த 29-ந்தேதி முதல் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 217 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,535 கனஅடியில் இருந்து 3,031கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,535 கனஅடியில் இருந்து 3,031 கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.