×

நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து

பெங்களூரு : நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸாவுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, ‘ஸ்லிம்’ எனப்படும் எஸ்எல்ஐஎம் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய திட்டமிட்டது. இதையடுத்து மோசமான வானிலை காரணமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து SLIM (smart lander investigating moon) விண்கலம் இன்று(செப்.,07) காலை 4.40 மணிக்கு ஏவப்பட்டது. இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் அடுத்த 4-6 மாதங்களில் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. “நிலவுக்கு SLIM லேண்டர் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உலகளாவிய விண்வெளி சமூகத்தின் மற்றொரு வெற்றிகரமான சந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என இஸ்ரோ  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இத்திட்டம் வெற்றி பெற்றால் நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Isro ,Moon ,Bangalore ,Japan Space Research Company ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...